Posts

The பாப்பா பாட்டு !

Chorus: குட்டி பாப்பா இந்த சுட்டிப் பாப்பா யாரு இது யாரு ? செல்ல மழலையில் தவழ்ந்து வரும்  தேரு இது யாரு? கிச்சு கிச்சு காட்டி  சிரிக்க சொல்லும் இந்த ஊரு அத பாரு ! பிச்சு பிச்சு கன்னம் கிள்ள சொல்லுறியே நீ எந்த ஊரு ? என்ன பேரு ? Baby: Varnikaa...I'm Varnikaa.. Varnikaa.. V for Varnikaa! Advisor (Female): ஜன்னலின் கம்பியா இல்லை வெற்றியின் படிகளே ஏறிடு போராடி உன் அப்பன் சோம்பேறி,  அவன் ஜோடி வாயாடி இருப்பினும் இருக்கட்டும் இவைகளும் சாயலில் சரி பாதி Advisor (Male): வேகம் மட்டும் வழியில்லை, அமைதியும் நிலை இல்லை தடைகளும் பெரும் படை இல்லை, உடைந்திடும் அது வெறும் கண்ணாடி நாடெங்கும் புகழ் பாடி சொல்லுமே பெருமையாய் உன் பேரையே கொண்டாடி Chorus: Varnikaa... we are proud of Varnikaa...Varnikaa.... V for Varnikaa!

பறவையில் ஒரு வகை

கனவிலே வெகு நேரமாய், காற்றிலே ஏன் பறக்கிறாய் ? தென்படும் வேளையில், தென்றலாய் ஏன் மாறினாய் ? என கேட்கையில், பின்தொடர்கையில், பூஞ்சோலையில், சென்று ஒளிகிறாய்; ஒளிர்வதும், பின் ஒளிவதும், இவள் விண்மீன், விடை கூறினாய்! நாம் போகிற வழியிலே, பூக்களை நீ கொய்கிறாய் கொய்கிற பூக்களை நம் சாலையில் விரிக்கிறாய்! நாணத்தில் நிற்கிறாய், பூஞ்சோலையில் ஒரு மலர் பூவென, உனை பறிக்கையில், முட்களாய் ஏன் குத்தினாய் ? பார்த்ததும் ஏன் தொடரனும், என இலக்கணம் கேட்கிறாய் கேட்டதும், சொல்ல முடியுமா, என் தயக்கத்தை உணர்கிறாய்; கேள்விக்கு விடை சொல்லவா, இல்லை கேட்காத கதை பல கூறவா? காட்சியை மறந்த என் கண்கள், அதில் மயக்கத்தை பார்க்கிறாய்! மெய்யிலே ஒரு உயிரென, உன்னைத் தொடரவே, நான் முயல்கிறேன்; இதை உணர்த்தவே தமிழ் இலக்கணம், என்னை புலவனாய், ஏன் மாற்றினாய்? கேள்விகள் பல கேட்கிறாய், என சொல்லியே மீண்டும் பறக்கிறாய்; கேள்வியில் இது பாதி தான் என சொல்லும் முன்னே மறைகிறாய்! காற்றிலே, வெகு வேகமாய், செல்லும் பறவையில் நீ ஒரு வகை தடம் மாறுமோ விண்ணில் பார்க்கிறேன், ஏமாற்றமே என எண்ணினேன்; தூரத்தில், வந்து நிற்கிறாய், எ...

செயற்கை நுண்ணறிவு - அத்தியாயம் 1 - கனவுகள்

தொலைபேசி, வழக்கத்தை விட சற்று அதிகமாகவே ஒலி எழுப்பியது. இருண்ட அலுவலக அறை. ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு மின்விசிறி, ஒரு தொலைபேசி, இதை தவிர வேறு எதுவும் இல்லாததால், தொலைபேசி மணி அந்த இருண்ட அறையில் கேட்போரை பயமுறுத்தும் அளவிற்கு எதிரொலித்தது. ஆ.. சுவற்றில் மாட்டியிருந்த பழைய கடிகாரத்தை பற்றி சொல்லவில்லையே. கடிகாரம் மாட்டி இருந்தது என்னவோ உயரத்தில் தான். ஆனால் அதன் ஊசல் மேஜையின் உயரம் வரை நீண்டு இருந்தது. கடிகாரத்தின் நாழிகை முள்ளின் சத்தம் அந்த தொலைபேசி மணியின் சப்தத்தில் கேட்கவில்லை. மின்விசிறியோ எந்நேரமும் கழண்டு விழும் நிலையில் சுற்றி கொண்டு இருந்தது. இப்படி பேய்களையே மிரட்டும் சூழலில் கூட சிறிதும் அசராமல், நாற்காலியில் அமர்ந்தவாறே தூங்கினான் நமது கதாநாயகன் ராஜேஷ். மணி , பன்னிரண்டு முப்பது ஆகவே, கடிகாரம் தன் இடையில் வைத்திருந்த ஒரு சுற்றியலால் ஒரு சிறிய தகரத்தை ஒரு போடு போட்டது. இந்த பேரொலியில் கண் விழித்தான் ராஜேஷ். தனது நித்திரையை சித்திரவதை  செய்த கடிகாரத்தை சிறிது நேரம் முறைத்து பார்த்தான். அந்த நீண்ட ஊசலே தனது தலையில் அடித்த வாறு உணர்ந்தான். அவன் கோபத்தை மேலு...

வருக வருக !

நள்ளிரவு தாண்டி இரண்டு ஜாமம் ஆகின்றது. சந்தானம் சொல்லுவது போல, பேய்களே duty முடித்துவிட்டு வீடு திரும்பம் நேரம். எதோ திடீரென்று தமிழில் எழுத தோன்றுகிறது.   ஏன் என்று தெரியவில்லை. எவ்வளவு நாள் தான் ஆங்கிலத்தை மட்டுமே கொலை செய்வது என்ற எண்ணம் போல. நமது தமிழ் மொழிக்கும் உரிமை கொடுக்க வேண்டும் அல்லவா?  இப்படி சுத்த தமிழில் தட்டச்சு செய்வதற்கு எனக்கு சற்று வித்தியாசமாய் இருகின்றது. ஆனாலும் பரவாஇல்லை. இல்லாவிடில் எனக்கு தெரிந்த வெகு சில மொழிகளில் ஒன்றை விரைவில் இழந்து விடுவேன். என்ன எழுதலாம்?  கவிதை? அல்லது கதை? கணினி (spelling sari thaane?) வலையில் தமிழ் மொழி பற்று உள்ள பலர் உள்ளனர்.  அவர்களை போல் நாம்மால் தமிழ் வளர்க முடியா விட்டாலும், நம்மால் முடிந்த தமிழ் தொண்டு புரியலாம் என்று எத்தனித்தேன். (satru range aana words vara aarambithu vittathe) "தொண்டு செய்கிறேன் என்று தமிழை கொன்று விடாதே " என்று சில தூரக் குரல்கள் ஒலித்தாலும், அதை காதில் கேளாத வாரே சமாளிப்...