Posts

Showing posts from 2012

செயற்கை நுண்ணறிவு - அத்தியாயம் 1 - கனவுகள்

தொலைபேசி, வழக்கத்தை விட சற்று அதிகமாகவே ஒலி எழுப்பியது. இருண்ட அலுவலக அறை. ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு மின்விசிறி, ஒரு தொலைபேசி, இதை தவிர வேறு எதுவும் இல்லாததால், தொலைபேசி மணி அந்த இருண்ட அறையில் கேட்போரை பயமுறுத்தும் அளவிற்கு எதிரொலித்தது. ஆ.. சுவற்றில் மாட்டியிருந்த பழைய கடிகாரத்தை பற்றி சொல்லவில்லையே. கடிகாரம் மாட்டி இருந்தது என்னவோ உயரத்தில் தான். ஆனால் அதன் ஊசல் மேஜையின் உயரம் வரை நீண்டு இருந்தது. கடிகாரத்தின் நாழிகை முள்ளின் சத்தம் அந்த தொலைபேசி மணியின் சப்தத்தில் கேட்கவில்லை. மின்விசிறியோ எந்நேரமும் கழண்டு விழும் நிலையில் சுற்றி கொண்டு இருந்தது. இப்படி பேய்களையே மிரட்டும் சூழலில் கூட சிறிதும் அசராமல், நாற்காலியில் அமர்ந்தவாறே தூங்கினான் நமது கதாநாயகன் ராஜேஷ். மணி , பன்னிரண்டு முப்பது ஆகவே, கடிகாரம் தன் இடையில் வைத்திருந்த ஒரு சுற்றியலால் ஒரு சிறிய தகரத்தை ஒரு போடு போட்டது. இந்த பேரொலியில் கண் விழித்தான் ராஜேஷ். தனது நித்திரையை சித்திரவதை  செய்த கடிகாரத்தை சிறிது நேரம் முறைத்து பார்த்தான். அந்த நீண்ட ஊசலே தனது தலையில் அடித்த வாறு உணர்ந்தான். அவன் கோபத்தை மேலு...

வருக வருக !

நள்ளிரவு தாண்டி இரண்டு ஜாமம் ஆகின்றது. சந்தானம் சொல்லுவது போல, பேய்களே duty முடித்துவிட்டு வீடு திரும்பம் நேரம். எதோ திடீரென்று தமிழில் எழுத தோன்றுகிறது.   ஏன் என்று தெரியவில்லை. எவ்வளவு நாள் தான் ஆங்கிலத்தை மட்டுமே கொலை செய்வது என்ற எண்ணம் போல. நமது தமிழ் மொழிக்கும் உரிமை கொடுக்க வேண்டும் அல்லவா?  இப்படி சுத்த தமிழில் தட்டச்சு செய்வதற்கு எனக்கு சற்று வித்தியாசமாய் இருகின்றது. ஆனாலும் பரவாஇல்லை. இல்லாவிடில் எனக்கு தெரிந்த வெகு சில மொழிகளில் ஒன்றை விரைவில் இழந்து விடுவேன். என்ன எழுதலாம்?  கவிதை? அல்லது கதை? கணினி (spelling sari thaane?) வலையில் தமிழ் மொழி பற்று உள்ள பலர் உள்ளனர்.  அவர்களை போல் நாம்மால் தமிழ் வளர்க முடியா விட்டாலும், நம்மால் முடிந்த தமிழ் தொண்டு புரியலாம் என்று எத்தனித்தேன். (satru range aana words vara aarambithu vittathe) "தொண்டு செய்கிறேன் என்று தமிழை கொன்று விடாதே " என்று சில தூரக் குரல்கள் ஒலித்தாலும், அதை காதில் கேளாத வாரே சமாளிப்...