பறவையில் ஒரு வகை
கனவிலே வெகு நேரமாய், காற்றிலே ஏன் பறக்கிறாய் ? தென்படும் வேளையில், தென்றலாய் ஏன் மாறினாய் ? என கேட்கையில், பின்தொடர்கையில், பூஞ்சோலையில், சென்று ஒளிகிறாய்; ஒளிர்வதும், பின் ஒளிவதும், இவள் விண்மீன், விடை கூறினாய்! நாம் போகிற வழியிலே, பூக்களை நீ கொய்கிறாய் கொய்கிற பூக்களை நம் சாலையில் விரிக்கிறாய்! நாணத்தில் நிற்கிறாய், பூஞ்சோலையில் ஒரு மலர் பூவென, உனை பறிக்கையில், முட்களாய் ஏன் குத்தினாய் ? பார்த்ததும் ஏன் தொடரனும், என இலக்கணம் கேட்கிறாய் கேட்டதும், சொல்ல முடியுமா, என் தயக்கத்தை உணர்கிறாய்; கேள்விக்கு விடை சொல்லவா, இல்லை கேட்காத கதை பல கூறவா? காட்சியை மறந்த என் கண்கள், அதில் மயக்கத்தை பார்க்கிறாய்! மெய்யிலே ஒரு உயிரென, உன்னைத் தொடரவே, நான் முயல்கிறேன்; இதை உணர்த்தவே தமிழ் இலக்கணம், என்னை புலவனாய், ஏன் மாற்றினாய்? கேள்விகள் பல கேட்கிறாய், என சொல்லியே மீண்டும் பறக்கிறாய்; கேள்வியில் இது பாதி தான் என சொல்லும் முன்னே மறைகிறாய்! காற்றிலே, வெகு வேகமாய், செல்லும் பறவையில் நீ ஒரு வகை தடம் மாறுமோ விண்ணில் பார்க்கிறேன், ஏமாற்றமே என எண்ணினேன்; தூரத்தில், வந்து நிற்கிறாய், எ...