வருக வருக !
நள்ளிரவு தாண்டி இரண்டு ஜாமம் ஆகின்றது. சந்தானம் சொல்லுவது போல, பேய்களே
duty முடித்துவிட்டு வீடு திரும்பம் நேரம். எதோ திடீரென்று தமிழில் எழுத தோன்றுகிறது.
duty முடித்துவிட்டு வீடு திரும்பம் நேரம். எதோ திடீரென்று தமிழில் எழுத தோன்றுகிறது.
ஏன் என்று தெரியவில்லை. எவ்வளவு நாள் தான் ஆங்கிலத்தை மட்டுமே கொலை செய்வது என்ற எண்ணம் போல. நமது தமிழ் மொழிக்கும் உரிமை கொடுக்க வேண்டும் அல்லவா?
இப்படி சுத்த தமிழில் தட்டச்சு செய்வதற்கு எனக்கு சற்று வித்தியாசமாய்
இருகின்றது. ஆனாலும் பரவாஇல்லை. இல்லாவிடில் எனக்கு தெரிந்த வெகு சில மொழிகளில் ஒன்றை விரைவில் இழந்து விடுவேன்.
என்ன எழுதலாம்? கவிதை? அல்லது கதை?
கணினி (spelling sari thaane?) வலையில்
தமிழ் மொழி பற்று உள்ள பலர் உள்ளனர். அவர்களை போல் நாம்மால் தமிழ் வளர்க முடியா விட்டாலும், நம்மால் முடிந்த தமிழ் தொண்டு புரியலாம் என்று எத்தனித்தேன். (satru range aana words vara aarambithu vittathe)
"தொண்டு செய்கிறேன் என்று தமிழை
கொன்று விடாதே " என்று சில தூரக் குரல்கள் ஒலித்தாலும், அதை காதில் கேளாத வாரே சமாளிப்பதும் ஒரு திறமை தான்.
கவிதை எழுத மிகுந்த கற்பனை தேவை. மற்றும் இலக்கிய நயமும் இருத்தல் அவசியம். அந்த அளவிற்கு நம்மிடம் சரக்கு இல்லாததால், ஒரு கதையில் இருந்து ஆரம்பித்தால் நன்றாய் இருக்கும் என்று நினைகிறேன். யாருக்கு தான் கதை பிடிக்காது. சிறு வயதில் இருந்தே கதை கேட்டு வளர்ந்தவர்கள் தானே நாம் அனைவரும். கதையின் நடை நன்றாக இல்லா விட்டாலும் இது கதாசிரியரின் பாணி போல என்று மக்கள் நம்பி ஏமாந்து விடுவார்கள். அந்த நம்பிக்கையை வீணாக்காமல் எனக்கு ஆதரவு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்வதுடன் இந்த வலை தளத்திற்கு உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் :-). இது வரை பொறுமையுடன் படித்ததற்கும் நன்றி!!
Ready to taste the nectar.
ReplyDeleteஇந்த கருத்தை தாங்கள் தமிழில் கூறி இருக்கலாமே!!
Delete