செயற்கை நுண்ணறிவு - அத்தியாயம் 1 - கனவுகள்

தொலைபேசி, வழக்கத்தை விட சற்று அதிகமாகவே ஒலி எழுப்பியது. இருண்ட அலுவலக அறை. ஒரு மேஜை, ஒரு நாற்காலி, ஒரு மின்விசிறி, ஒரு தொலைபேசி, இதை தவிர வேறு எதுவும் இல்லாததால், தொலைபேசி மணி அந்த இருண்ட அறையில் கேட்போரை பயமுறுத்தும் அளவிற்கு எதிரொலித்தது.
ஆ.. சுவற்றில் மாட்டியிருந்த பழைய கடிகாரத்தை பற்றி சொல்லவில்லையே. கடிகாரம் மாட்டி இருந்தது என்னவோ உயரத்தில் தான். ஆனால் அதன் ஊசல் மேஜையின் உயரம் வரை நீண்டு இருந்தது.
கடிகாரத்தின் நாழிகை முள்ளின் சத்தம் அந்த தொலைபேசி மணியின் சப்தத்தில் கேட்கவில்லை. மின்விசிறியோ எந்நேரமும் கழண்டு விழும் நிலையில் சுற்றி கொண்டு இருந்தது. இப்படி பேய்களையே மிரட்டும் சூழலில் கூட சிறிதும் அசராமல், நாற்காலியில் அமர்ந்தவாறே தூங்கினான் நமது கதாநாயகன் ராஜேஷ். மணி , பன்னிரண்டு முப்பது ஆகவே, கடிகாரம் தன் இடையில் வைத்திருந்த ஒரு சுற்றியலால் ஒரு சிறிய தகரத்தை ஒரு போடு போட்டது. இந்த பேரொலியில் கண் விழித்தான் ராஜேஷ். தனது நித்திரையை சித்திரவதை  செய்த கடிகாரத்தை சிறிது நேரம் முறைத்து பார்த்தான். அந்த நீண்ட ஊசலே தனது தலையில் அடித்த வாறு உணர்ந்தான். அவன் கோபத்தை மேலும் கிளறிய தொலைபேசியை சிறிது நேரம் பார்த்தான்.
'நிறுத்த மாட்டாயா நீ?' என்று முனகியவாறே எடுத்தான் கைபேசியை.
"ஹலோ" ராஜேஷின் குரலில் தூக்கம் பேசியது.
"டேய், " தேன் போன்ற ஒரு பெண்ணின் குரல்.
தேனுக்கு எப்படி குரல் இருக்கும்? என்று எழுத்தாளனை தூக்கத்தில் திட்டிய வாறே,
"யாரு நீங்க ?" என்று கடிந்தான்.
"நீ கேட்கறத பார்த்தா, இந்த வேலையும் போய்டுச்சு போல இருக்கு?"
தனது வேலையை பற்றி பேசியவுடன், சிறிது தூக்கம் கலைந்தது.
"உனது முதல் வேலையை இழந்த வாறு இதையும் இழந்து விடாதே!" அந்த பெண் மேலும் கூறினாள்.

'இவளுக்கு எப்படி எனது முதல் வேலையை பற்றி தெரியும்?', சிறிது யோசித்தவாறே "மேடம், மனிதனுக்கு தூக்கம் மிக முக்கியம். எனது முதல் கம்பெனியில் என்னை அவர்கள் இரவில் கூட தூங்க விட வில்லை"
"ஆமாம், நீ சேர்ந்தது கால் சென்டர் வேலையில். இரவில் தூங்கினால் வேலையை யார் பார்ப்பது? அது இருக்கட்டும், உனது லைட் ஹவுஸ் வேலை என்ன ஆச்சு?"
"எனக்கு கொடுக்க பட்ட அறையில், ஒளி அதிகமாக இருந்த காரணத்தால். மின் விளக்கை அணைத்து விட்டு தூங்கினேன். அது என் குற்றமா?"
"அது குற்றமில்லை. உன் அறை விளக்கு என்று நினைத்து லைட் ஹவுஸ் மெயின் விளக்கை அணைத்தாயே அது தான் குற்றம்."
தனது பூர்வீகத்தை புட்டு புட்டு வைக்கின்றாளே ! யார் இவள்?
"நீங்க யாரு மேடம்? உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? நாம் சந்தித்து இருக்கின்றோமா?"
"இல்லை இனி மேல் தான்!" நான் வருங்கலத்தில இருந்து பேசுகின்றேன், "நாம் நேரில் எப்படி சந்தித்து பேசலாம் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டு இருகின்றது!"
"புரிய வில்லையே!" சற்று குழம்பி தன் தலையை பிரான்டினான்
"நீ முதலில் எழுந்து தொலைபேசியை எடு , எல்லாம் புரியும்" என்று கூறி அந்த பெண் மறைந்தாள்.

தான் இன்னும் எழுந்திரிக்க வில்லை என்பதை உணர்ந்து ராஜேஷ் உடனே கண் விழித்தான். இந்த வேலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இது மற்ற வேலைகளை போல இல்லை. இது அவன் இரண்டு வருடம் கடினமாய் உழைத்து பெற்ற வேலை. உலகிலேயே தலை சிறந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மேதை விவேக் அவனுக்கு கொடுத்த  வேலை. கண்களை கசக்கிவிட்டு இன்னும்  ஒலித்து கொண்டு இருந்த தொலைபேசியை சற்று தயக்கத்துடன் எடுத்தான்.
"ஹலோ!"




Comments

  1. நல்ல ஆரம்பம்.A good beginning is half the work done.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. You sure have kindled my interest.Good beginning.

    ReplyDelete
  3. அறிவியல்கதைன்னா நிறையயோசிக்க வேண்டியிருக்கும்.பாப்போமே.

    ReplyDelete
  4. அறிவியல்கதைன்னா நிறையயோசிக்க வேண்டியிருக்கும்.பாப்போமே.

    ReplyDelete
  5. அறிவியல்கதைன்னா நிறையயோசிக்க வேண்டியிருக்கும்.பாப்போமே.

    ReplyDelete
  6. மிக சரியாக சொன்னீர்கள்.இது 2012 இல் எழுதிய பதிவு. இன்னும் அடுத்த பதிவை எழுதவில்லை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவையில் ஒரு வகை

வருக வருக !